search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுவராஜ் சிங்"

    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்துள்ளார்.
    • 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

    டி20 உலகக்கோப்பை 19-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.

    ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

    1. மார்கஸ் ஸ்டாய்னிஸ்: 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*

    2. டேவிட் வார்னர்: 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010

    2. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்துகள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014

    அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007

    2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*

    2. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014

    3. கிளென் மேக்ஸ்வெல் : 18, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014

    3. கேஎல் ராகுல் : 18, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021

    மேலும் இப்போட்டியில் 327.78 என்ற ஸ்டிரைக் ரேட்டில் இலங்கையை அடித்து நொறுக்கிய அவர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

    1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் : 59* ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022*

    2. யுவராஜ் சிங் : 58 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா சமன் செய்துள்ளார்.
    • இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

    இதன் மூலம் ஹர்த்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார்.

    ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர்.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார்.

    அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா (34*) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (34) இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் (31) உள்ளார்.

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோற்றாலும் ஜப்பான் வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை தூய்மைப்படுத்தியது அனைவரையும் நெகிழ செய்தது. #Japan #YuvrajSingh

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் வலுவான பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொண்டது. ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த பெல்ஜியத்தை ஆசிய நாடான ஜப்பான் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

    முதல் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றிருந்த ஜப்பான், அதன்பின் 3 கோல்களை விட்டுக்கொடுத்து மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த தோல்வியை தாங்க முடியாத ஜப்பான் வீரர்கள் கதறி அழுதனர். மேலும் போட்டியை நேரில் ரசித்த ரசிகர்களும் கதறி அழுதார்கள்.

    அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. ஐரோப்பிய அணியான பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து மக்களின் அன்பை ஈர்த்த ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷிய மொழியில் நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

    மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தனர். இதேபோல் போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் தோல்வியின் விரக்தியில் இருந்தாலும் மைதான கேலரியை சுத்தம் செய்த பின்னரே அங்கிருந்து வெளியேறினர்.

    ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் இந்த செய்கையை பாராட்டியுள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், “இந்த தூய்மை நடவடிக்கையை ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஒவ்வொரு வீரரும், அணியினரும் உலகில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என ட்வீட்டியுள்ளார்.
    ×